புரோ கபடி: அரையிறுதிக்கு தகுதி பெற்ற 4 அணிகள் அறிவிப்பு

புரோ கபடி: அரையிறுதிக்கு தகுதி பெற்ற 4 அணிகள் அறிவிப்பு

புரோ கபடி லீக் போட்டிகள் முடிவடைந்து நேற்று எலிமினேட்டர் போட்டிகள் தொடங்கிய நிலையில் அரையிறுதிக்கு தகுதி பெற்ற நான்கு அணிகள் குறித்த தகவல் தற்போது தெரிய வந்துள்ளது

நேற்றைய முதல் எலிமினேட்டர் போட்டியில் உபி அணியை வென்ற பெங்களூரு அணியும், இரண்டாவது எலிமினேட்டரில் ஹரியானா அணியை வென்ற மும்பை அணியும் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

ஏற்கனவே டெல்லி மற்றும் பெங்கால் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளதால் டெல்லி, பெங்கால், பெங்களூரு மற்றும் மும்பை அணிகள் அரையிறுதியில் மோதுகின்றன.

முதல் அரையிறுதி: டெல்லி மற்றும் பெங்களூரு (அக்டோபர் 16)

இரண்டாம் அரையிறுதி: மும்பை மற்றும் பெங்கால் (அக்டோபர் 16)

Leave a Reply