புன்னகையுடன் கைகுலுக்கி வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்ட முக ஸ்டாலின் – டிடிவி தினகரன்

இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில் இன்று கவர்னர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் உரையாற்றினார். கவர்னர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்று சட்டபேரவை கூடும் போது அனைத்து எம்.எல்.ஏக்களும் வருகை தந்த போது தற்செயலாக டிடிவி தினகரன் மற்றும் திமுக தலைவர் முக ஸ்டாலின் ஆகியோர் எதிரெதிரே சந்தித்துக் கொண்டனர்

அப்போது இருவரும் ஒருவரை ஒருவர் கை குலுக்கிக் கொண்டு புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். ஆளும் அதிமுக அரசுக்கு எதிராக அரசியல் செய்து வரும் திமுக மற்றும் அமமுக வருங்காலத்தில் கூட்டணியில் இணைவதற்கான அறிகுறியாகவே இந்த புத்தாண்டு வாழ்த்துக்கள் பரிமாறிக் கொள்ளப் பட்டதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

Leave a Reply