கொரோனா கட்டுக்குள் வருமா?

இந்தியாவில் கொரோனோ வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மத்திய அரசும் மாநில அரசும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து கொரோனோ நோயை கட்டுப்படுத்தி வருகின்றன

அந்த வகையில் ரயில் பயணிகளை கண்காணிக்க தற்போது புதிய ரோபோ ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது புனே ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த ரோபோக்கு கேப்டன் அர்ஜுன் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது

இந்த ரோபோ ரயில் பயணிகளுக்கு வெப்பநிலையை சரிபார்ப்பது மாஸ் அணிந்துள்ளார்களா? என்பதை சோதனை செய்வது, தனிமனித இடைவெளி மற்றும் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது என்ற அனைத்து பணிகளையும் பார்க்கிறது

இந்த ரோபோவுக்கு ரயில் பயணிகள் ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது இதேபோன்று நாட்டின் மற்ற ரயில் நிலையம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

Leave a Reply