புத்தாண்டு கொண்டாட காவல்துறை தடையா? அதிர்ச்சி அறிவிப்பு

நட்சத்திர விடுதிகள் இரவு 1 மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட தடை விதிக்கப்பட்டு உள்ளது என சென்னை காவல்துறை தெரிவித்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இதன்ப்டி சற்றுமுன் வெளிவந்த தகவலின்படி புத்தாண்டை முன்னிட்டு நட்சத்திர, கேளிக்கை விடுதிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து சென்னை காவல்துறை உத்தரவு பிறப்பித்து உள்ளது. அவற்றில் ஒன்று நட்சத்திர விடுதிகள் இரவு 1 மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட தடை விதிக்கப்பட்டு உள்ளது என சென்னை காவல் துறை அறிவித்து உள்ளது.

புத்தாண்டு கொண்டாட்டம் என்பதே இரவு 12 மணிக்கு தான் தொடங்கும். அதன்பின் ஒரு மணி நேரத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தை முடிக்க வேண்டும் என காவல்துறை அறிவித்திருப்பது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக இளைஞர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகின்றனர்.

மேலும் புத்தாண்டு தினத்தில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தவிர்ப்பதற்காகவும், சட்டம் மற்றும் ஒழுங்குக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும் போலீசார் நகர் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply