புதையல் கிடைக்க சாமியாருடன் உறவு கொள்ள மனைவியை வற்புறுத்திய கணவன்: அதிர்ச்சி தகவல்

புதையல் கிடைக்க சாமியாருடன் உறவு கொள்ள மனைவியை வற்புறுத்திய கணவன்: அதிர்ச்சி தகவல்

தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஒருவர் தனது மனைவியை புதையல் ஆசைக்காக சாமியார் உடன் உடல் உறவுகொள்ள வற்புறுத்தியதால் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தெலுங்கானா மாநிலத்தில் சமீபத்தில் 25 வயது வாலிபர் ஒருவருக்கு திருமணம் நடந்தது. அந்த வாலிபர் வேலை செய்ய விருப்பமின்றி குறுக்கு வழையில் சீக்கிரமே பணக்காரர் ஆகவேண்டும் என்றுயோசித்துக் கொண்டிருந்தார்

அப்போது ஒரு சாமியாரை சந்தித்த போது சீக்கிரம் புதையல் கிடைத்தால் நீ சீக்கிரம் பணக்காரர் ஆகிவிடலாம் என்று புதையல் இருக்கும் இடம் தெரிய வேண்டும் என்றால் உனது மனைவியை என்னுடன் உடலுறவு கொள்ள செய்ய வேண்டும் என்றும் அவ்வாறு செய்தால் புதையல் இருக்கும் இடத்தை தான் சொல்வதாகவும் கூறினார்

இதனை நம்பிய அந்த வாலிபர் தனது மனைவியை அழைத்து வந்து சாமியாருடன் உடலுறவு கொள்ள வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. கட்டிய கணவனே இன்னொருவருடன் உடல் உறவுகொள்ள சொன்னதால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் காவல் நிலையத்தில் சென்று புகார் அளித்தார். தற்போது புதையலுக்கு ஆசைப்பட்ட வாலிபரும், சாமியாரும் சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published.