shadow

புதுவை உள்பட 10 தொகுதிகள்: திமுக கூட்டணியில் காங்கிரஸ்

2019 மக்களவை தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரசுக்கு புதுச்சேரி உட்பட 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

எந்தெந்த தொகுதிகள் என்பது கூட்டணி கட்சிகளுடன் அழைத்து முடிவு செய்து அறிவிக்கப்படும் என்றும், கூட்டணி கட்சிகளுக்கு பகிர்ந்தளித்த பின்னர் மீதமுள்ள தொகுதிகளில் திமுக போட்டியிடும் என்றும் அவர் மேலும் கூறினார்.

மேலும் ஓட்டலில் ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தாமல் வெளிப்படையாக கூட்டணி குறித்து அறிவித்துள்ளதாகவும், தேமுதிகவுடன் எந்த கூட்டணி பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்றும், தேமுதிக இணைவதற்கான வாய்ப்பு இருந்தால் அதுகுறித்து அறிவிப்போம் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *