புதுச்சேரி சட்டப்பேரவையில் மறைந்த பிரபலங்களுக்கு இரங்கல்

புதுச்சேரி சட்டப்பேரவையில் மறைந்த பிரபலங்களுக்கு இரங்கல்

புதுச்சேரி சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் சற்றுமுன் தொடங்கியது. இன்றைய தொடரின் முதல் நாளில் புதுவையை சேர்ந்த பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் மறைவுக்கு புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

மேலும் முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்ணான்டஸ், திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சீத்தா வேதநாயகம் ஆகியோர் மறைவுக்கும் பட்ஜெட் கூட்டத்தொடர் பேரவையில் இரங்கல் தெரிவிக்கபட்டது

மேலும் இன்றைய சட்டசபை கூட்டத்தில் பயங்கரவாத தாக்குதலில் பலியான 40 ராணுவ வீரர்களுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.இன்னும் சற்று நேரத்தில் நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் நாராயணசாமி அரசின் அடுத்த 4 மாத செலவீனங்களுக்காக இடைக்கால பட்ஜெட்டை சபையில் தாக்கல் செய்யவுள்ளார். இதைத்தொடர்ந்து சட்டசபை இன்றுடன் முடிவடைந்து காலவரையின்றி ஒத்தி வைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply