shadow

புதிய ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்க ரூ.8000 கோடி செலவு செய்த மத்திய அரசு

கடந்த ஆண்டு ரூ.500 மற்றும் ரூ.1000 செல்லாது என மத்திய அரசு அறிவித்த பின்னர் புதியதாக ரூ.20, ரூ.50, ரூ.200, ரூ.500 மற்றும் ரூ.2000 ஆகிய நோட்டுக்களை அச்சிட்டு பொதுமக்களின் புழக்கத்திற்கு வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த புதிய நோட்டுக்களை அச்சடிக்க எவ்வளவு செலவானது என்பது குறித்து நேற்று லோக்சபாவில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பொன். ராதகிருஷ்ணன் எழுத்துப் பூர்வமாக பதிலளித்துள்ளார். இந்த பதிலில் அவர் கூறியிருப்பதாவது:

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்பு வரை 500 ரூபாய் நோட்டுகளை அச்சிட சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய் வரை செலவு செய்யப்பட்டுள்‌ளதாகவும் அதற்கு முன்பு வரை சுமார் ஆயிரத்து 695‌ கோடி எண்ணிக்கையில் 500 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டதாகவும், அதற்காக 4 ஆயிரத்து 968 கோடியே 84 ‌லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல், புதிதாக அச்சிடப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளுக்கு ஆயிரத்து 29‌3 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவும், 200 ரூபாய் நோட்டுகளை அச்சிட 522 கோடியே 83 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

ஆக மொத்தம் புதிய நோட்டுக்களை அச்சடிக்க மத்திய அரசு சுமார் ரூ.8000 கோடி செலவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply