புதிய மோட்டார் திருத்த சட்டம் அமல் இல்லை: 3 மாநில முதல்வர்கள் அறிவிப்பு

புதிய மோட்டார் திருத்த சட்டம் அமல் இல்லை: 3 மாநில முதல்வர்கள் அறிவிப்பு

மத்திய அரசு கொண்டு வந்த புதிய மோட்டார் வாகன திருத்த சட்டத்தை அமல்படுத்த போவதில்லை என மூன்று மாநில முதல்வர்கள் அறிவித்துள்ளதை அடுத்து தமிழக முதல்வர் என்ன முடிவெடுப்பார் என்ற ஆவல் அதிகரித்துள்ளது

புதிய மோட்டார் வாகன திருத்தச் சட்டத்தை அமல்படுத்தப் போவதில்லை என ஏற்கனவே மேற்குவங்க அரசு அறிவித்த நிலையில் தற்போது தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அவர்களும் தங்கள் மாநிலத்தில் புதிய மோட்டார் வாகன சட்டம் அமல்படுத்தப்போவதில்லை என்று அறிவித்துள்ளார். அதேபோல் ஜார்கண்ட் மாநிலத்தில் புதிய மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தை இப்போதைக்கு அமல்படுத்தபோவதில்லை என்றும் மூன்று மாதங்கள் கழித்தே இதுகுறித்து ஆலோசனை செய்வோம் என்றும் தெரிவித்துள்ளார்.

மேற்குவங்க, தெலுங்கானா, ஜார்கண்ட் முதல்வர் போல் தமிழக முதல்வரும் முடிவெடுக்க வேண்டும் என தமிழக மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.