புதிய அரசியல் கட்சி தொடங்கும் லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன்

பீகார் மாநில முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ், புதிய அரசியல் கட்சி ஒன்றை விரைவில் தொடங்கவுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியில் எனக்கு வேண்டியவர்களுக்காக 2 தொகுதிகளைக் கேட்டேன். ஆனால், அதனைத் தர எனது சகோதரரும், கட்சியின் தலைவருமான தேஜஸ்வி மறுத்து விட்டார்.

எனவே எனக்கென்று ஒரு கட்சியை தொடங்க முடிவு செய்துவிட்டேன். லாலு – ராப்ரி மோர்ச்சா என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்க உள்ளேன். வரும் தேர்தலில் எனது கட்சி பீகாரில் 20 தொகுதிகளில் தனித்து போட்டியிடும் என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *