புடவை பெண்களின் அழகை அதிகரிக்க வைக்குமா?

புடவை பெண்களின் அழகை அதிகரிக்க வைக்குமா?

பெண்கள் என்றாலே, அனைவருக்கும் நினைவில் முதலில் வருவது சேலை அணிந்த உருவம் தான். ஆனால், இன்றைய காலத்தில் இருக்கும் அனைத்து ஆடைகளையும் ஆணும் பெண்ணும் போட்டிபோட்டுக் கொண்டு அணிய ஆரம்பித்துவிட்டனர்.

இந்த நிலையில் பெண்களான நாம் நமக்கே உரித்தான சேலையை நேர்த்தியாய் கட்டினாலேயே, பெண்களின் அழகு மேம்பட்டு தெரியும்..! சேலைகளில் பல ரகங்கள் இருந்தாலும், பெண்கள் காட்டன் சேலையை உடுத்தினால் வரும் அழகான மிடுக்கான தோற்றத்திற்கு இணையான தோற்றத்தை வேறு எந்த ஒரு சேலையும் தந்துவிட முடியாது.

அப்படிப்பட்ட காட்டன் சேலையை கொசகொசவென்று கட்டாமல், நேர்த்தியாய் கட்டினாலே போதும்; பெண்மையின் அழகு உயர்ந்து புலப்படும். இந்நிலையில் ஒல்லியான பெண்களால் சற்று எளிதாக காட்டன் சேலையை கட்டிவிட இயலும்; ஆனால் சற்று எடை அதிகம் உள்ள பெண்கள் காட்டன் சேலையை நேர்த்தியாய் கட்ட பாடுபடுவதை நம்மால் பார்க்க முடிகிறது.

கிராமப்புறங்களில் இன்றும் பெண்கள் தொடர்ந்து சேலையையே அணிந்து வருகின்றனர். ஆயினும் நகரங்களில் இந்நிலை பெரிதும் மாறி வருகிறது. அங்கு வாழும் பெண் கள் பல்வேறு துறைகளில் படித்து வேலை செய்வதுடன் பல வெளி வேலைகளையும் கையாளும் வல்லமை பெற்று வருகின்றனர். இதனால் வீட்டிலிருக்கும் பெண்கள் போல சேலை அணிவது சிறிது சிரமமான காரியமாய் இருக்கிறது.

இளம் பெண்களின் உடைகளில் பெரிய மாற்றம் ஏற்பட்டுவிட்டது. சேலை கட்டுவது மறைந்து சுடிதார் முதன்மை பெற்றுள்ளது. நகரங்களில் கல்லூரிக்குச் செல்லும் பெண்களில் சேலை கட்டிச் செல்பவர் குறைவானவர்களே. சேலை கட்டினால் பஸ்களுக்கு ஓட முடியாது. ஸ்கூட்டர், சைக்கிள் ஓட்டுவதற்கும் ஒத்துவராது என்பதை அனுபவத்தில் கண்டனர்.

பொதுவாக சேலை 5 1/2 மீட்டர் நீள முடையதாக இருக்கும். சேலை கட்டு ம்போது முந்தானைக்கு நேரெதிர் முனையில் ஒரு முடிச்சு போட்டு இடுப்பில் வலதுபுறம் சொருகிக் கொ ள்ள வேண்டும். பின்னர் இடதுபுறத்தி லிருந்து வலது புறமாக ஒரு சுற்று சுற்றி, நான்கு விரலையும் சற்று விரித்து வைத்துக்கொண்டு 4 அல்ல து 5 மடிப்புகள் மடித்து இடுப்பில் சொருகிக் கொள்ள வேண்டும். இந்த மடிப்புகள் `முன்கொசுவம்’ என்று அழைக்க படும். பின்பு மறுபடியும் இடதுபுறத்திலிருந்து வலதுபுறமாக ஒரு சுற்று சுற்றி பெரிய மடிப்பாக 3 அல்லது 4 மடிப்புகள் மடித்து இடது தோளில் போட்டுக் கொள்ள வேண்டும். இது `முந்தி’ அல்லது `முந்தானை’ என்று அழைக்கபடும். இதுவே நிவி பாணி (nivi) என்று அழைக்கப் படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.