’பீஸ்ட்’ டைட்டிலுக்கு எதிர்ப்பை தெரிவித்த முதல் அரசியல்வாதி!

விஜய் நடித்து வரும் அடுத்த திரைப்படத்தின் டைட்டில் ’பீஸ்ட்’ என நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த டைட்டிலுக்கு தனது எதிர்ப்பை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பிரமுகர் வன்னிஅரசு அவர்கள் தெரிவித்துள்ளார்

இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளதாவது: நடிகர் விஜய் நடிக்கும் படங்கள் தமிழில் தான் எடுக்கப்படுகின்றன. ஆனால் தமது தாய்மொழியான தமிழ் மொழியை மதிக்காமல் தொடர்ந்து ஆங்கிலப்பெயர்களையே வைப்பதன் மர்மம் என்னவோ? மாஸ்டர், பிகில் படங்களை தொடர்ந்து ’பீஸ்ட்’ என பெயர் சூட்டி தாய்மொழியை புறக்கணித்து அவமானப்படுத்துவது சரியா? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.