பீகார் முன்னாள் முதல்வர் காலமானார்.

பீகார் முன்னாள் முதல்வர் ஜெகநாத் மிஸ்ரா டெல்லியில் இன்று காலமானார். அவருக்கு வயது 85

பீகார் மாநிலத்தில் மூன்று முறை முதல்வராக இருந்தவர் ஜெகநாத் மிஸ்ரா. மேலும் இவர் மத்திய அமைச்சராகவும் பணியாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக உடல்நலமின்றி இருந்த மிஸ்ரா, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சையின் பலனின்றி காலமானார்.

மறைந்த மிஸ்ரா அவர்கள் பல நூல்களை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply