பீகார் மாநிலத்தில் விரைவில் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அந்த மாநில மக்களுக்கு தடுப்பூசி இலவசம் என பாஜக சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது

இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது சிவசேனா தலைவர் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார்

பீகாருக்கு மட்டும் தடுப்பூசி இலவசம் என்றால் மற்ற மாநிலங்கள் பாகிஸ்தானில் உள்ளதா? அனைத்து மாநிலங்களுக்கும் தடுப்பூசி இலவசமாக கொடுக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்

ஏற்கனவே தமிழகம் புதுவை உள்பட ஒரு சில மாநிலங்கள் தங்கள் மாநில மக்களுக்கு ஒரு தடுப்பூசி இலவசம் என அறிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply