பி.எட்., படிப்புக்கு 2ஆம் கட்ட கலந்தாய்வு: இன்று தொடங்கியது

பி.எட் படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு சென்னை காமராஜர் சாலையில் உள்ள வெலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தில் இன்று தொடங்கியது.

14 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 220 இடங்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு இன்று நடைபெறுகிறது.

தமிழகம் முழுவதும் உள்ள 7 அரசு கல்வியியல் கல்லூரிகள் மற்றும் 14 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக இருந்த 2 ஆயிரத்து நாற்பது இடங்களை நிரப்ப கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி முதல் 13ம் தேதி வரை முதற்கட்ட கலந்தாய்வு நடத்தப்பட்டது.

முதற்கட்ட கலந்தாய்விற்கு 3 ஆயிரத்து 800 பேர் விண்ணப்பித்திருந்த போதிலும், ஆயிரத்து எண்ணூற்று இருபது இடங்களுக்கு மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெற்றன.

முதற்கட்ட கலந்தாய்வில் 7 அரசு கல்வியியல் கல்லூரிகளில் உள்ள அனைத்து இடங்களும் நிரம்பியது. இதில், காலியாக உள்ள 220 இடங்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு இன்று நடைபெறுகிறது.

கலந்தாய்வுக்கு விண்ணப்பித்து இடம் கிடைக்காத மாணவர்கள், இன்று ஒருநாள் மட்டும் நடக்கும் 2ம் கட்ட கலந்தாய்வில் கலந்துகொள்ள ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவுறுத்தி உள்ளது.

Leave a Reply