பிவி சிந்துவுக்கு மேலும் ஒரு வெற்றி: பதக்கம் வெல்வாரா?

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தற்போது ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று நடைபெற்ற பேட்மிட்டன் மகளிர் பிரிவில் பிவி சிந்து இரண்டாவது சுற்றில் வெற்றி பெற்றுள்ளார்

ஹாக்காங் நாட்டின் யீ நகன் செயுங் என்ற வீராங்கனையுடன் மோதிய பிவி சிந்து 21-9 21-16 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றார்.

இதனை அடுத்து அவர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்று விட்டார். இன்னும் மூன்று போட்டிகளில் பிவி சிந்து வென்றால் பதக்கம் கிடைப்பது உறுதி