பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு பதில் வெள்ள நிவாரண உதவி செய்த சிறுமி

பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு பதில் வெள்ள நிவாரண உதவி செய்த சிறுமி

கர்நாடக மாநிலத்தில் வரலாறு காணாத வகையில் பெரும் மழை பெய்ததால் அங்கு மாநிலம் முழுவதும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனை அடுத்து லட்சக்கணக்கான தங்கள் உடமைகளை இழந்து ஒரே நாளில் நடுத்தெருவுக்கு வந்து உள்ளனர்

இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கர்நாடக மாநில மக்களுக்கு இந்தியா முழுவதிலும் இருந்து உதவிகள் குவிந்து வருகின்றன. இந்த வகையில் ஒஸ்மானாபாத் என்ற பகுதியை சேர்ந்த சபேல் கேஸ்கர் என்றா சிறுமி ஒருவர் தன்னுடைய பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு செய்யும் செலவு தொகையை தனது தந்தையிடமிருந்து வாங்கி அதில் வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி அனுப்பி உள்ளார். அவருடைய உதவியை சிறியதாக என்றாலும் அவருடைய மனம் மிகப் பெரியது என நெட்டிசன்கள் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்

இதேபோல் மற்றாவர்களும் தங்கள் பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்த்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதே இந்த சிறுமியின் கோரிக்கையாக உள்ளது

Leave a Reply