பிரெட்டில் வடை செய்வது எப்படி?

பிரெட்டில் வடை செய்வது எப்படி?

என்னென்ன தேவை?

பிரெட் துண்டுகள் – 8

வறுத்த ரவை – அரை கப்

அரிசி மாவு – இரு டேபிள் ஸ்பூன் உப்பு, எண்ணெய் – தேவைக்கு

கேரட் துருவல் – இரண்டு டேபிள் ஸ்பூன்

பொடியாக அரிந்த வெங்காயம் – கால் கப்

இஞ்சித் துருவல் – ஒரு டீஸ்பூன் பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கியது) – ஒரு ஸ்பூன்

மிளகாய்த் தூள் – ஒரு டீஸ்பூன்

கறிவேப்பிலை, மல்லித் தழை – சிறிது

வேகவைத்து மசித்த உருளைக் கிழங்கு – கால் கப்

எப்படிச் செய்வது?

வாயகன்ற பாத்திரத்தில் பிரெட்டை உதிர்த்துக்கொள்ளுங்கள். எண்ணெய் தவிர மற்ற பொருட்களை அதில் போட்டு சிறிது நீர் தெளித்துக் கெட்டியாகப் பிசைந்துகொள்ளுங்கள். இந்த மாவை வடையாகத் தட்டி, எண்ணெய்யில் போட்டுப் பொரித்தெடுங்கள். விருப்பப்பட்டால் தேங்காய் சட்னி, மல்லி சட்னியுடன் சாப்பிடலாம்.

Leave a Reply