பிரியங்கா காந்திக்கு குவியும் ஆதரவு: காங்கிரஸ் தலைவர் ஆவாரா?

பிரியங்கா காந்திக்கு குவியும் ஆதரவு: காங்கிரஸ் தலைவர் ஆவாரா?

காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல் காந்தி சமீபத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலின் தோல்விக்கு பொறுப்பேற்று தலைவர் பதவியிலிருந்து விலகினார். அவரை சமாதானப்படுத்த முன்னணி காங்கிரஸ் தலைவர்கள் எடுத்த முயற்சிகள் தோல்வி அடையவே அடுத்த காங்கிரஸ் தலைவர் யார்? என்பது குறித்த இழுபறி தொடர்ந்து நீடித்து வருகிறது

இந்த நிலையில் பிரியங்கா காந்தி காங்கிரஸ் தலைவராக மூத்த தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக பஞ்சாப் முதல்வர் அமீந்தர்சிங் காங்கிரஸ் தலைவராக பிரியங்கா காந்தி சரியான தேர்வு என்று கூறியுள்ளார். ஏற்கனவே பிரியங்கா காந்திக்கு சசிதரூர் ஆதரவு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் விரைவில் காங்கிரஸ் தலைவராக பிரியங்கா காந்தி தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரியங்காவின் தலைமையில் காங்கிரஸ் எழுச்சி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply