அதிர்ச்சியில் காவல்துறையினர்

பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணன் காரில் ஏராளமான மதுபாட்டில்கள் கைப்பற்றியதால் காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

சென்னை ஈசிஆர் சாலையில் உள்ள முட்டுக்காடு சோதனை சாவடியில் சமீபத்தில் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த வழியே ஒரு கார் வருவதை பார்த்து அந்த காரை நிறுத்தினார்

அந்த காரை போலீசார் சோதனை செய்தபோது நூற்றுக்கும் அதிகமான மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது

இதனையடுத்து அந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் கார் ஓட்டுநர் செல்வ குமார் என்பவரை கைது செய்து அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்

இந்த நிலையில் அந்த கார் நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கு சொந்தமான கார் என்பதால் போலீசார் அவரிடம் விசாரிக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது

Leave a Reply