பிரபல காமெடி நடிகர் யோகிபாபுவுக்கு திருமணம்: குவியும் வாழ்த்துக்கள்

கோலிவுட் திரையுலகில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவர் ஆகிய யோகிபாபுவுக்கு இன்று காலை அவருடைய குலதெய்வம் கோவிலில் திருமணம் நடைபெற்றது. யோகிபாபுவுக்கு பிப்ரவரி 5ம் தேதி மஞ்சுபார்கவி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெறுவதாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்த நிலையில் இந்த செய்தி தற்போது உறுதியாகியுள்ளது

இன்று காலை யோகிபாபுவின் குலதெய்வம் கோவிலில் யோகிபாபு-மஞ்சுபார்கவி ஆகியோர்களுக்கு பெரியோர்கள் திருமணம் செய்து வைத்தார்கள். இந்த திருமணத்தில் இருவீட்டாரின் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக தெரிகிறது. இருப்பினும் யோகி பாபு மஞ்சுபார்கவி ஆகியோரின் திருமண வரவேற்பு பிரம்மாண்டமான முறையில் சென்னையில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது

Leave a Reply