பிரபல இயக்குனர் மரணம் என வதந்தி: அதிர்ச்சியில் திரையுலகம்

பிரபல இயக்குனர் மரணம் என வதந்தி: அதிர்ச்சியில் திரையுலகம்

பிரபல இயக்குனரும் நடிகருமான ஆர்.சுந்தர்ராஜன் மரணம் என சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பயணங்கள் முடிவதில்லை படத்தில் இருந்து தனது இயக்குனர் பயணத்தை ஆரம்பித்த ஆர்.சுந்தர்ராஜன், அதன் பின் நான் பாடும் பாடல், வைதேகி காத்திருந்தால், அம்மன் கோவில் கிழக்காலே, மெல்ல திறந்தது கதவு, ராஜாதி ராஜா திருமதி பழனிச்சாமி உள்பட பல வெற்றிப்படங்களை இயக்கினார்.

இந்த நிலையில் இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜன் மரணம் என வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக வதந்தி பரவி வருகிறது. ஆர்.சுந்தர்ராஜன் நலமுடன் இருப்பதாகவும், வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என்றும் திரையுலகினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Leave a Reply