பிரதமர் குப்பை அள்ளியதை வேண்டுமென்றே கொச்சைப்படுத்தும் மீடியாக்கள்!

பிரதமர் குப்பை அள்ளியதை வேண்டுமென்றே கொச்சைப்படுத்தும் மீடியாக்கள்!

சீன அதிபர் ஜீ ஜின்பிங் தமிழகத்துக்கு வருகை தந்திருந்த போது கோவளம் கடற்கரையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பிரதமர் மோடி தங்கியிருந்தார். அவர் அதிகாலையில் எழுந்து கடற்கரை ஓரத்தில் நடைபயிற்சி சென்ற போது கடற்கரை ஓரத்தில் ஒதுங்கி இருந்த குப்பைகளை எடுத்து சுத்தம் செய்தார்.

இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகிய நிலையில் தற்போது தமிழக அரசின் முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரில் பிரதமர் இந்த நட்சத்திர ஓட்டலில் தங்க போகிறார் என்று தெரிந்தும், அந்த ஓட்டல் அருகே உள்ள கடற்கரையில் சுத்தம் செய்யாதது ஏன்? என்று கேள்வி எழுப்பி உள்ளனர்

இந்த கேள்வி ஒரு அபத்தமான கேள்வி என்று சமூக வலைதள பயனாளிகள் தெரிவித்துள்ளனர். பிரதமர் வருகைக்காக ஏற்கனவே தனியார் நட்சத்திர விடுதியில் கடற்கரை ஓரங்களிலும் தூய்மை செய்யப்பட்டு வைக்கப்பட்டு இருந்தது என்பதுதான் உண்மை. ஆனால் கடலில் இருந்து தொடர்ந்து அலைகள் வந்து கொண்டிருக்கும் போது அந்த அலைகளில் பிளாஸ்டிக் குப்பைகள் அவ்வப்போது கரைக்கு வந்து கொண்டே இருந்தன

ஒவ்வொரு நிமிடமும் அலைகளிலிருந்து பிளாஸ்டிக் குப்பைகள் கரைக்கு வந்து கொண்டிருந்த போது, ஒரு சில குப்பைகள் மீண்டும் அலைகளால் அடித்துச் செல்லப்படுவதும், சில கோப்பைகள் கடற்கரை ஓரத்தில் ஒதுங்குவதும் இயல்பான ஒன்று. இந்த குப்பைகளை தான் பிரதமர் அன்று சுத்தம் செய்தார்.

ஆனால் ஏற்கனவே இந்த குப்பைகள் இருந்ததாகவும் இந்த குப்பைகளை தனியார் நட்சத்திர விடுதியும், தமிழக அரசும் கவனிக்கவில்லை என்றும் வேண்டுமென்றே ஒரு சில மீடியாக்கள் கொச்சைப்படுத்தி செய்திகள் வெளியிட்டு வருகின்றன. மேலும் இந்த ஒரு சில குப்பைகளால் தமிழகம் முழுவதும் தூய்மை இந்தியா திட்டம் தோல்வி அடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியிடுகின்றன.

கடல் அலைகளால் ஒவ்வொரு நிமிடமும் குப்பைகள் இழுத்துச் செல்லப்படுவதும் கரையில் மீண்டும் ஒதுங்குவதும் இயற்கையான ஒன்று என்பதை என்பதை இந்த மீடியாக்கள் அறியாமல் இல்லை, பிரதமரின் இந்த வீடியோவை கொச்சைப்படுத்த வேண்டும் என்பதற்காகவே இதுபோன்ற செய்திகளை வெளியிட்டு வருவதாக கூறப்படுகிறது

Leave a Reply