பிரதமரைக் குப்பைப் பொறுக்க விடுவதா? சென்னை நபர் புகார்

பிரதமரைக் குப்பைப் பொறுக்க விடுவதா? சென்னை நபர் புகார்

ஒரு நாட்டின் பிரதமரை குப்பை பொறுக்க விட்டு வேடிக்கை பார்ப்பதா? என தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவில் சென்னையை சேர்ந்த ஒருவர் புகார் அளித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் சீன அதிபருடன் சென்னை, மாமல்லபுரம் வந்த பிரதமர் மோடி, காலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டபோது கோவளம் கடற்கரையில் இருந்த குப்பைகளை பொறுக்கி அதனை குப்பைத்தொட்டியில் போட்டார்.

இந்த நிலையில் பிரதமரைக் குப்பைப் பொறுக்க வைத்த நட்சத்திர விடுதியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னையை சேர்ந்த ஒருவர் முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் பதிவு செய்துள்ளார். இந்த புகார் மீது முதலமைச்சரின் தனிப்பிரிவு நடவடிக்கை எடுக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்,

Leave a Reply