கடந்த சில வருடங்களாகவே பெண்ணின் திருமண வயது 18 லிருந்து 21 ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது. பெண்களின் உடல் மற்றும் ஆரோக்கியம், பிரசவகால இறப்பு விகிதத்தை குறைக்கும் வகையில் பெண்ணின் சட்டப்படியான மண வயதை 21 ஆக உயர்த்த மத்திய அரசு சமீபத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் அமைச்சகம் கொண்ட குழு ஒன்றை உருவாக்கியது.

இந்த குழு தற்போது செய்துள்ள பரிந்துரைகளின் படி பெண்ணின் திருமண வயதை 21 ஆக உயர்த்த பரிசீலிக்கப்பட்டு வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் பிரதமரின் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது என்று திமுக எம்பி கனிமொழி அவர்கள் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

பெண்களின் திருமண வயதை 18ல் இருந்து 21க்கு உயர்த்துவது குறித்து பரிசீலிக்கப்படுகிறது என்ற பிரதமரின் அறிவிப்பு வரவேற்கதக்கது. இந்த நேரத்தில் பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கான 33% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தையும் மேலும் தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *