பிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு ஹெலிகாப்டர் அனுப்பிய கவர்னர்

பிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு ஹெலிகாப்டர் அனுப்பிய கவர்னர்

அருணாச்சல பிரதேச மாநில கவர்னராக பி.டி. மிஸ்ரா நேற்று நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது அதே நிகழ்ச்சியில் கர்ப்பிணி பெண் ஒருவர் கலந்து கொண்டார். அப்போது அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த அந்த தொகுதி எம்.எல்.ஏ ஒரு கர்ப்பிணி பெண் பிரசவ வலியால் துடிப்பதாகவும் அவரை அவசரமாக இடாநகர் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

நிலைமையின் சீரியஸை உணர்ந்த கவர்னர் மிஸ்ரா அந்த பெண்ணையும், அவரது கணவரையும் தனது ஹெலிகாப்டரில் அழைத்து கொண்டு இடாநகர் நோக்கி சென்றார். தன்னுடன் வந்த 2 அதிகாரிகளை தவாங்க் நகரில் தங்க உத்தரவிட்டார். அவர்களை அழைத்து சென்ற ஹெலிகாப்டர், தேஜ்பூரில் எரிபொருள் நிரப்ப தரையிறக்கப்பட்டது. எரிப்பொருள் நிரப்பிய பின்னர் ஹெலிகாப்டரில் திடீரென தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டது.

இந்த நிலையில் அந்த கர்ப்பிணி பெண்ணிற்கு பிரசவலி அதிகமானது. இதனையடுத்து தேஜ்பூர் விமானப்படை அதிகாரிகளை தொடர்பு கொண்ட கவர்னர் உடனடியாக விமானப்படை ஹெலிகாப்டரை வரவழைத்தார். நிறைமாத கர்பிணியான அந்த பெண்ணையும், கணவரையும் இடா நகருக்கு ஹெலிகாப்டரில் அனுப்பி வைத்தார்.

ஹெலிகாப்டர் தரையிறங்கும் முன்பாகவே ஆம்புலன்ஸ் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அந்த பெண்ணிற்க்கு மருத்துவமனையில் அழகான குழந்தை பிறந்தது.

அந்த பெண்ணிற்கு உரிய சிகிச்சை பற்றி கேட்டறிந்த கவர்னர் குழந்தை பெற்ற பெண்ணிற்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். பிரசவ வேதனையில் துடித்த பெண்ணுக்கு தக்க சமயத்தில் உதவி செய்ய கவர்னருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.

 

Leave a Reply

Your email address will not be published.