பிப்ரவரி 5ஆம் தேதி விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தஞ்சாவூரில் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட பெருவுடையார் கோயிலில் பிப்ரவரி 5ஆம் தேதி குடமுழுக்கு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தஞ்சை பெரிய கோவிலில் குடமுழுக்கு நடைபெறுவதையொட்டி பிப்ரவரி 5ம் தேதி உள்ளூர் விடுமுறை என தஞ்சை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

இதனையடுத்து அன்றைய தினம் தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply