பிக்பாஸ் வீட்டில் முதல் டும் டும் டும்! நடத்தி வைப்பவர் யார் தெரியுமா?

பிக்பாஸ் வீட்டில் முதல் டும் டும் டும்! நடத்தி வைப்பவர் யார் தெரியுமா?

பிக்பாஸ் வீட்டில் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று கமல் அடிக்கடி கூறி வருவார். அந்த வகையில் உண்மையிலேயே எதிர்பாராத ஒன்றாகிய திருமணம் ஒன்று பிக்பாஸ் வீட்டில் நடைபெறவுள்ளதாம். ஆனால் அது தமிழ் பிக்பாஸில் அல்ல, இந்தி பிக்பாஸில்

பிக்பாஸ் இந்தி 13 சமீபத்தில் தொடங்கிய நிலையில் இதில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் நடிகை ராஷ்மி. இவரும் அர்ஹான்கான் என்பவரும் கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வருகின்றனர்.

இந்த நிலையில் விரைவில் அர்ஹான்கான் பிக்பாஸ் வீட்டில் வைல்ட்கார்ட் எண்ட்ரியாக வரவிருப்பதாகவும், பிக்பாஸ் வீட்டிலேயே இவர்களது திருமணம் நடைபெறவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் இந்த தகவலை ராஷ்மியும் அர்ஹான்கானும் தனித்தனியே மறுத்துள்ளனர். திருமணம் நடந்தால் அது ரசிகர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் தான் நடக்கும் என்றும் இருவரும் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply