shadow

பிக்பாஸ் நடிகையுடன் டேட்டிங் செல்லும் ஹர்திக் பாண்ட்யா!

ஹிந்தி பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபல பாலிவுட் நடிகையுடன் கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா டேட்டிங் செய்து கொண்டிருப்பதாக வெளிவந்துள்ள தகவல்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவுடன் ஏற்கனவே ஒரு சில பாலிவுட் நடிகைகள் கிசுகிசுக்கப்பட்ட நிலையில் தற்போது செர்பிய நாட்டைச் சேர்ந்த நடாஷா என்ற நடிகையுடன் டேட்டிங் சென்று கொண்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இருவரும் இணைந்து காபிஷாப் உள்பட ஒருசில இடங்களுக்கு சென்றுள்ள புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது

மேலும் நடிகை நடாஷாவை தனது இல்லத்திற்கு அழைத்துச் சென்ற ஹர்திக், தனது குடும்பத்தினர்களுடன் அறிமுகப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *