பிக்பாஸ் டைட்டில் வின்னர் முகின்? காரணம் கேட்டால் அதிர்ந்து விடுவீர்கள்

பிக்பாஸ் டைட்டிலை யார் வெல்வார்? என்பதற்கான ஓட்டுப்பதிவு நேற்றிரவுடன் முடிவடைந்த நிலையில் வாக்குகள் பதிவு செய்யப்படும் பகுதியில் இருந்து கிடைத்த தகவலின்படி முகினுக்கு அதிக வாக்குகள் கிடைத்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

ஆனால் அதே நேரத்தில் முகினுக்கும் லாஸ்லியாவுக்கும் இடையே மிககுறைந்த வாக்குகள் வித்தியாசம் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

கவின் ரசிகர்கள் லாஸ்லியாவுக்கும் தர்ஷன் ரசிகர்கள் முகினுக்கும் வாக்களித்த நிலையில் முகினுக்கு என தனியாக வாக்குகள் குவிந்தது ஒரு விஷயத்தில் என்று கூறப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முகின் ‘நீதான்… நீதான்.. என்ற பாடலை பாடினார். அந்த பாடலுக்கு லட்சக்கணக்கானோர் அடிமையாகிவிட்டனர். அவரது அந்த ஒரிஜினல் பாடலை யூடியூபில் தேடியெடுத்து பலர் கேட்டு வருகின்றனர்.,

இதனால் முகினுக்கு வாக்குகள் குவிந்ததாகவும், அவர்தான் தற்போது முதலிடத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் பிக்பாஸ் குழுவினர் மற்றும் விஜய் டிவி நிர்வாகம் தேர்வு செய்யும் நபரே டைட்டில் வின்னர் என்பதால் யார் டைட்டில் வின்னர்? என்பதை பொறுத்திருந்து பார்போம்

//www.youtube.com/watch?v=pgOT6LuKB6U

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *