பிக்பாஸ் சீசன் 5: முதல் புரமோ வீடியோ

பிக்பாஸ் சீசன் 5அக்டோபர் 3ஆம் தேதி இந்த நிகழ்ச்சி தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் சற்றுமுன் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் முதல் புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

இந்த வீடியோவில் கல்யாண வீட்டில் ஆரம்பத்தில் நடக்கும் வரவேற்புகள், அதன்பின் போகப்போக நடக்கும் குளறுபடிகள், சண்டை சச்சரவுகள் ஆகிய காட்சிகள் உள்ளன.

பிக்பாஸ் வீட்டிலும் இதேபோல் ஆரம்பத்தில் நல்ல வரவேற்பு இருக்கும் என்றும், போகப்போக சண்டை சச்சரவு வரும் என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் புரோமோ விடியோ வெளியாகிவிட்டதை அடுத்து இந்த நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது