பிக்பாஸ் ஃபைனாலே டிக்கெட் யாருக்கு? போட்டியாளர்களிடையே பரபரப்பு


பிக்பாஸ் வீட்டில் இருந்து வனிதா வெளியேற்றப்பட்டவுடன் தற்போது 7 பேர் மட்டுமே உள்ள நிலையில் இந்த எழுவரில் ஒருவருக்கு இறுதிப்போட்டிக்கு செல்ல நேரடி வாய்ப்பு வழங்கப்படும் என பிக்பாஸ் இன்று அறிவித்துள்ளார்.

இந்த டிக்கெட்டை பெற வேண்டும் என்றால் இந்த வாரம் முழுவதும் வழங்கப்படும் கடுமையான டாஸ்குகளில் வென்று முதலிடத்தை பிடிக்க வேண்டும் என்று பிக்பாஸ் அறிவித்துள்ளதால் போட்டியாளர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சாண்டி, கவின், சேரன், முகின், தர்ஷன் ஆகியோர் இந்த டிக்கெட்டை பெற தீவிரமாக டாஸ்குகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் யாருக்கு அந்த டிக்கெட் கிடைக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Leave a Reply