பிக்பாஸ் ஃபைனல் ஒளிபரப்பில் புதிய சஸ்பென்ஸ்

பிக்பாஸ் ஃபைனல் நிகழ்ச்சி இன்று மாலை 6 மணிக்கு ஆரம்பமாகும் என நேற்றே கமல்ஹாசன் கூறியிருந்தார். பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சியின் சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களுக்கு உரிய காட்சிகள் சனிக்கிழமை மொத்தமாக படமாக்கப்பட்டு பின் இரண்டு நாட்களில் ஒளிபரப்பாகும். எனவே அந்தந்த வாரம் எவிக்சனில் வெளியேறுவது யார்? என்பது சனிக்கிழமையே தெரிந்துவிடும்

ஆனால் இந்த வாரம் ஞாயிறு காட்சிகளை மாலை 6 மணிக்குத்தான் படப்பிடிப்பை தொடங்குகின்றனர். ஆனால் அதே நேரத்தில் நேரடி ஒளிபரப்பு இல்லை. இன்று மாலை ஆறு மணி முதல் 6.30 மணி வரை ஒளிபரப்பாகும் காட்சிகள் நேற்றே படமாக்கப்பட்டது. அதில்தான் ஷெரின் வெளியேறும் காட்சிகள் வருகிறது

இந்த அரைமணி நேரக்காட்சி மற்றும் விளம்பரங்கள் ஒளிபரப்பாகும் முன் இன்று மாலை ஆறு மணிக்கு படமாக்கப்படும் காட்சிகள் தயார் செய்யப்பட்டு ஒளிபரப்பாகவுள்ளது. எனவே பிக்பாஸ் ஃபைனல் நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு இல்லை என்றாலும் அரைமணி நேரம் மட்டுமே தாமதித்து வரும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் வின்னர் யார் என்பதை கடைசி வரை சஸ்பென்ஸ் உடன் வைத்திருக்கலாம் என்பதுதான் சேனலின் திட்டம். எனவெ முகின் வின்னர் என்பதெல்லாம் இப்போதைக்கு யூகமே. நிகழ்ச்சி 10 மணிக்கு முடிகிறது என்றால் அனேகமாக 9.30 மணிக்குத்தான் உண்மையில் யார் வின்னர் என்பது தெரியவரும்

Leave a Reply