‘பிகில்’ வெறித்தனம் பாடல் குறித்த புதிய அப்டேட்!


தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ‘பிகில்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ‘வெறித்தனம்’ என்ற பாடல் விரைவில் வெளியாகும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது

இந்த நிலையில் வெறித்தனம்’ பாடலை சித் ஸ்ரீராம் மற்றும் ஸ்ரேயா கோஷல் பாடியுள்ளதாக ஏஜிஎஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் கிளாசிக் மெலடி பாடலான இந்த பாடல் அனைத்து தரப்பினர்களையும் கவரும் என்றும் இந்த பாடலை விரைவில் எதிர்பாருங்கள் என்றும் அந்நிறுவனம் தனது டுவிட்டரில் அறிவித்துள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா அடுத்த மாதம் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வரும் தீபாவளி அன்று வெளியாகவுள்ள இந்த படத்தில் விஜய், நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு, கதிர், விவேக், டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ், இந்துஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

Leave a Reply