பிகில்’ தான் அட்லியின் கடைசி படமா?

பிகில்’ தான் அட்லியின் கடைசி படமா?

விஜய் நடித்த பிகில் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் அட்லி, அடுத்ததாக ஷாருக்கான் படத்தை இயக்க போகிறார் என்றும், பிரபல தெலுங்கு நடிகர் ஒருவரின் படத்தை இயக்க போகிறார் என்றும் கூறப்பட்ட நிலையில் அதெல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை என கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.

காப்பி அடித்து எடுத்தாலும் ஜனரஞ்சகமாக படத்தை பார்க்கும் வகையில் எடுக்கும் நல்ல இயக்குனர் என்று அட்லிக்கு பெயர் இருந்தாலும், தயாரிப்பாளரை நசுக்குபவர் என்ற பெயரை எடுத்துள்ளார்.

இவரை வைத்து படமெடுத்த தயாரிப்பாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுவதற்கு ஒரே காரணம் அவர் கூறிய பட்ஜெட்டில் படத்தை எடுத்து முடிப்பதில்லை என்பதுதான். எனவே இனி அட்லிக்கு எந்த தயாரிப்பாளரும் படம் கொடுக்க வாய்ப்பே இல்லை என்றுதான் கூறப்படுகிறது. எனவே பிற தயாரிப்பில் அட்லி இயக்கிய கடைசி படம் ‘பிகில்’ என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் யாரும் வாய்ப்பு கொடுக்கவில்லை என்றால் தானே தயாரிக்க அட்லி முடிவு செய்திருப்பதாகவும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் வதந்திகள் பரவி வருகிறது

Leave a Reply