பிகில் டிக்கெட் கேட்ட ரசிகரிடம் ஹவுஸ்புல் என கூறி ஏமாற்றிய தியேட்டர் நிர்வாகம்

விஜய்யின் பிகில் திரைப்படம் ஒருபக்கம் இருநூறு கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் ஆகி சாதனை புரிந்த உள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் அந்த படத்திற்கு போதுமான பார்வையாளர்கள் வராததால் காட்சிகள் ரத்து தியேட்டர் நிர்வாகிகள் பேட்டி அளிப்பது குறித்த செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது

இந்த நிலையில் தற்போது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்று வெளியாகி வைரல் ஆகியுள்ளது. அந்த வீடியோவில் பிகில் படத்திற்கு 10 டிக்கெட்டுக்கள் வேண்டும் என்று கவுண்டரில் ஒரு ரசிகர் கேட்கிறார். அதற்கு அந்த கவுண்டரில் உள்ள நபர் தியேட்டர் ஹவுஸ்ஃபுல் நாளைக்கு வாருங்கள் என்று சொல்லி அனுப்பிவிடுகிறார்
இதனால் ஆச்சரியம் அடைந்தஅந்த ரசிகர் ’பரவாயில்லையே நம்ம தளபதி படத்துக்கு டிக்கெட் கிடைக்காத அளவுக்கு ஹவுஸ்புல் எல்லாம் ஆகி இருக்குது என்று சந்தோஷப்பட்டுள்ளார்.

ஆனால் உண்மை என்னவெனில் அந்த தியேட்டரில் அந்த காட்சியில் போதுமான பார்வையாளர்கள் வராததால் காட்சி ரத்து செய்யப்பட்டதாகவும் இதனை வெளியே சொல்ல முடியாமல் ஹவுஸ்புல் என்று கூறி வந்த ரசிகர்களை அனுப்பி விட்டதாகவும் தெரியவந்துள்ளது

Leave a Reply