shadow

பாஸ்கர் ஒரு ராஸ்கல்: இசை வெளியீட்டு விழா சில துளிகள்

அரவிந்தசாமி, அமலாபால் நடிப்பில் சித்திக் இயக்கியுள்ள ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது.

இந்த விழாவில் அரவிந்தசாமி பேசியதாவது: இந்த படத்தில் என்னை தேர்வு செய்ததற்காக இயக்குனர் சித்திக்கிற்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படத்தில் ஆக்ஷன் காட்சிகளுக்கு சில ரிஸ்க்குகளை எடுத்துள்ளேன். ஸ்டண்ட் மாஸ்டர் விஜயன் அவர்களின் 500 ஆவது படத்தில் நடித்தது எனக்கு பெருமையாக இருக்கிறது. படத்தில் ரோபோ மற்றும் சூரியின் காமெடி காட்சிகள் அருமையாக வந்துள்ளது, அவர்களுடன் நானும் சேர்ந்து சிறிது காமெடிக்கு முயற்சி செய்துள்ளேன். படம் நன்றாக வந்துள்ளது உங்கள் அனைவருக்கும் கண்டிப்பாக பிடிக்கும் என்று நம்புகிறேன்.

பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தின் தயாரிப்பாளர் பேசியதாவது: பாஸ்கர் ஒரு ராஸ்கல், ஒரு நல்ல எண்டர்டெய்னர் மூவியாக உருவாகியுள்ளது. இப்படத்திற்கு அட்வான்ஸ் தொகை வாங்கமலேயே அரவிந்த் சாமி இப்படத்தில் நடித்து கொடுத்தார். இயக்குனர் சித்திக் தமிழ் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றவாறு திரைக்கதையில் சில மாற்றங்களை செய்துள்ளார். படம் நன்றாக வந்துள்ளது. இசையமைப்பாளர் அம்ரிஷ் கணேஷ் படத்திற்கு நன்றாக இசையமைத்துள்ளார். பாடல்களும் அருமையாக வந்துள்ளது.”

பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தில் இசையமைப்பாளர் அம்ரேஷின் அம்மாவும் பழம்பெரும் நடிகையுமான ஜெயசித்ரா பேசியதாவது: அம்ரேஷ் எனது மகன், இப்போது மூன்றாவது முறையாக இந்த பெருமைமிக்க மேடையில் நிற்க செய்துள்ளான். மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில் இவரது இசை அனைவராலும் பாரட்டப்பட்டது. தற்போது இந்த மேடையில் இருந்த அறிஞர்கள் பலரும் அவரை பாராட்டியுள்ளனர், பெருமையாக உள்ளது. இந்த படம் வெற்றியடைய எனது வாழ்த்துக்கள்”

மேலும் இந்த விழாவில் அமலாபால், இயக்குனர் சித்திக், ரோபோ சங்கர், ஆஃப்தாப்ஷிவ்தசானி, நடிகை மீனா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply