பாலாவின் வர்மா படத்தை பார்ப்பதில் திடீர் சிக்கல்: ரசிகர்கள் அதிர்ச்சி

பாலா இயக்கத்தில் துருவ்விக்ரம் நடித்த வர்மா படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகாமல் இருந்த நிலையில் அந்த படம் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டது

அக்டோபர் 6-ஆம் தேதி முதல் ஓடிடியில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த படத்தை பார்க்க என்று ரசிகர்கள் இன்று மிகுந்த ஆர்வத்துடன் ஓடிடி தளத்திற்கு சென்றனர்

ஆனால் இந்தியாவில் உள்ளவர்கள் வர்மா படத்தை பார்க்க முடியாது என்று அதில் குறிப்புகள் வந்ததை அடுத்து அதிர்ச்சி அடைந்தனர்

எனவே வர்மா படத்தை இந்திய ரசிகர்கள் பைரஸியில் தான் பார்க்க வேண்டிய நிலை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply