பாலாவின் அடுத்த படத்தில் சூர்யா?

தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் ஏற்கனவே சூர்யா ‘நந்தா’ மற்றும் ‘பிதாமகன்’ ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்துள்ள நிலையில் விரைவில் மீண்டும் பாலாவின் இயக்கத்தில் அவர் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது

சமீபத்தில் சூர்யாவிடம் பாலா ஒரு கதையை கூறியதாகவும் இந்த கதையை கேட்டு அசந்துபோன நடிகர் சூர்யா, உடனே இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது

‘காப்பான்’, ‘சூரரை போற்று’ ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ள சூர்யா, அடுத்ததாக சிறுத்தை சிவா, மற்றும் கவுதம்மேனன் இயக்கத்தில் நடிப்பார் என்றும் அதன் பின்னர் அவர் பாலாவுடன் சேருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Leave a Reply