பாலால் மக்கள் வயிற்றில் அடித்த அதிமுக அரசு: முக ஸ்டாலின்

வயிற்றில் பால் வார்ப்பது என்றுதான் இதுவரை கேள்விப்பட்டிருக்கின்றோம். ஆனால் அதிமுக அரசு பாலால் மக்கள் வயிற்றில் அடித்துள்ளது என திமுக தலைவர் முக ஸ்டாலின் பால் விலை உயர்வு குறித்து கூறியுள்ளார்.

அதிமுக ஆட்சியில் இதுவரை மூன்று முறை பால் விலை உயர்ந்துள்ளதாகவும், பால்வளத்துறை லாபத்தில் இயங்கி வரும்போது இந்த விலையேற்றம் தேவையில்லாதது என்றும் முக ஸ்டாலின் மேலும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என கடந்த சில மாதங்களுக்கு முன் திமுக தலைவர் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply