பார்வையாளராக ஜல்லிக்கட்டை பார்த்த பெண் மாடுமுட்டி பரிதாப மரணம்

பார்வையாளராக ஜல்லிக்கட்டை பார்த்த பெண் மாடுமுட்டி பரிதாப மரணம்

தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு நேற்றும் இன்றும் பல நகரங்களில் நடைபெற்று வருகிறது. இன்று பாலமேடு பகுதியில் நடைபெற்று வரும் உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டைப் பார்க்க ஆயிரக்கணக்கானோர் அந்த பகுதியில் கூடி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

அதேபோல் திருச்சி அருகே உள்ள சூரியூர் என்ற பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை காளையர்கள் அடக்கி வருகின்றனர்

இந்த நிலையில் இந்த ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்க வந்த ஜோதிலட்சுமி என்ற பெண் மாடு முட்டியதில் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் ஜல்லிக்கட்டு போட்டியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்கிய காளையர்களுக்கு கூட காயம் மட்டுமே ஏற்பட்டுள்ளது என்பதும் வேடிக்கை பார்க்க வந்த பெண் ஒருவர் பலியாகி இருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published.