பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் பிரபல நடிகை

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் பிரபல நடிகை

திசை மாறிய பறவைகள், முரட்டுக்காளை, கழுகு, கரையெல்லாம் செண்பகப்பூ, ஒரு ஓடை நதியாகிறது உட்பட பல படங்களில் நடித்த நடிகை சுமலதா தற்போது அரசியலில் நுழையவுள்ளார்.

நடிகை சுமலதாவின் கணவரும் பிரபல நடிகருமான அம்பரீஷ், கர்நாடக மாநிலத்தில் உள்ள மாண்டியா தொகுதியின் எம்பியாக இருந்தார். கடந்த ஆண்டு அம்பரீஷ் மரணம் அடைந்துவிட்ட நிலையில் தற்போது அதே தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார்.

தனது கணவர் மாண்டியா தொகுதி மக்கள் மீது மிகுந்த அன்பு வைத்திருந்ததாகவும் எனவே தன்னை அந்த தொகுதியின் வேட்பாளராக காங்கிரஸ் நிறுத்தினால் வெற்றி வாய்ப்பு அதிகம் என்றும் சுமலதா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply