முக்குலத்தோர் புலிப்படை தலைவரும் நடிகருமான கருணாஸ் திருவாடனை தொகுதியில் எம்.எல்.ஏ ஆக இருந்து வருகிறார். இவருக்கு மீண்டும் அதிமுகவில் சீட் கிடைக்காது என்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது

இந்த நிலையில் நடிகர் கருணாஸ் சற்று முன்னர் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசியுள்ளார். இந்த சந்திப்பு தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

பாமக ஆதரவுடன் மீண்டும் திருவாடனை தொகுதியில் நடிகர் கருணாஸ் போட்டியிடுவாரா? அல்லது பாமக கட்சியில் இணைவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Leave a Reply