பாமகவுக்கு மாம்பழம் கிடைக்குமா? திமுகவால் புதிய சிக்கல்

பாமகவுக்கு மாம்பழம் கிடைக்குமா? திமுகவால் புதிய சிக்கல்

அதிமுக கூட்டணியில் ஏழு தொகுதிகளை பெற்று மக்களவை தேர்தலில் போட்டியிடும் பாமகவுக்கு அக்கட்சியின் சின்னமான மாம்பழம் சின்னம் கிடைப்பதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பாமக.வுக்கு 7 தொகுதிகளிலும் மாம்பழம் சின்னம் ஒதுக்க திமுக வழக்கறிஞர்கள் அணி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் நாளை மதியம் சின்னம் ஒதுக்கும் போதே மாம்பழம் சின்னம் பாமகவுக்கு கிடைக்குமா என்பது தெரியவரும் என கூறப்படுகிறது

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 6 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகள் வாங்கியதன் காரணமாக பாமகவின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published.