பாத்திரம் கழுவுவதும் டாய்லெட் கழுவுவதும் எனது வேலை அல்ல: பிக்பாஸ் குறித்து லட்சுமிமேனன்

அக்டோபர் நான்காம் தேதி முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்ப உள்ள நிலையில் தற்போது அந்த நிகழ்ச்சியில் நடிகை லட்சுமிமேனன் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது

இந்த நிலையில் இதுகுறித்து லட்சுமி மேனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார் நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை அது குறித்து வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்

பிக்பாஸ் வீட்டிற்கு சென்று அங்கு மற்றவர்கள் சாப்பிட்ட பாத்திரத்தை கழுவவும் மற்றவர்கள் பயன்படுத்திய டாய்லெட்டை கழுவுவதும் எனது வேலை அல்ல

அது மட்டுமின்றி விளம்பரத்திற்காக கேமரா முன் சண்டை போடவும் எனக்கு விருப்பமில்லை என்று கூறியுள்ளார்

லட்சுமி மேனனின் இந்த இன்ஸ்டாகிராம் பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Leave a Reply

Your email address will not be published.