பாடகி சின்மயிக்கு சமந்தா ஆதரவு

பாடகி சின்மயிக்கு சமந்தா ஆதரவு

திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை கூறியுள்ள பின்னணிப் பாடகி சின்மயிக்கு நடிகை சமந்தா டுவிட்டர் மூலம் ஆதர்வு கொடுத்துள்ளார். .

கடந்த சில நாட்களாக தமிழ் திரையுலகில் மீடூ விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில் வைரமுத்து மீது பாலியல் புகார் தெரிவித்துள்ள சின்மயிக்கு ஆதரவு கரம் நீட்டியுள்ளார் நடிகை சமந்தா

இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், “அன்புக்குரிய தோழி சின்மயி மற்றும் ராகுல் (சின்மயி கணவர்), உங்கள் இருவரையும் பத்தாண்டுகளாக நான் அறிவேன். நீங்கள் இருவரும் நேர்மையான மனிதர்கள். அதுவே நமது தோழமைக்கு வித்திட்டது. உங்களை இதயப்பூர்வமாக நேசிக்கிறேன், நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மையே” என்று சமந்தா தெரிவித்துள்ளார். இந்த டுவீட் தற்போது ட்விட்டரில் வைரலை ஏற்படுத்தி வருகிறது. பலரும் இந்த டுவீட்டை ரீட்வீட் செய்து பாராட்டு தெரிவித்து வரும் நிலையில், சிலர் சமந்தா இதை விளம்பரத்துக்காக செய்து வருவதாக கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் மீடூ பரப்புரைக்கு ஆதரவு தெரிவித்தும் சமந்தா டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். அதன்படி, ”பணியிடங்களில் ஏற்படும் பாலியல் அச்சுறுத்தல்களை பெண்கள் தைரியமாக பேசுவதில் மகிழ்ச்சி. அவர்களது மனவலிமை போற்றப்பட வேண்டியது. பாதிக்கப்படும் பெண்களில் சிலர் தங்களை ஏமாற்றிக்கொண்டு, தங்கள் மீதே சந்தேகம் கொண்டிருப்பார்கள். அவர்களுக்காக நான் வருந்துகிறேன். எனினும், இந்த விவகாரங்களில் பெண்கள் முன்வருவது, சிறுமிகளுக்கு ஏற்படும் கொடுமைகளையும் அகற்றும்” என சமந்தா தெரிவித்துள்ளார்.

Leave a Reply