பாஜக வேட்பாளர் கணவரை எதிர்த்து போட்டியிடும் சுயேட்சை மனைவி!

பாஜக வேட்பாளர் கணவரை எதிர்த்து போட்டியிடும் சுயேட்சை மனைவி!

உத்தரபிரதேசம் மாநிலம் ஆக்ரா தொகுதியில் பாஜக வேட்பாளராக ராம்நங்கர் கதேரியா. என்பவர் போட்டியிடுகிறார். இவர் ஏற்கனவே இதே தொகுதியில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில், இந்த தொகுதியில் தனக்கு சீட் கிடைக்கும் என்று எதிர்பார்த்த இவரது மனைவி மிருதுளா கட்டாரியா, தனக்கு பதிலாக தனது கணவருக்கு சீட் கொடுத்ததால் ஏமாற்றம் அடைந்தார்.

இதனால், அவரது கணவரை எதிர்த்து சுயேச்சை வேட்பாளராக மிருதுளா களம் இறங்கி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறும்போது, தனக்கு தன் கணவர் மீது கோபம் இல்லை, கட்சியின் மீதுதான் கோபம் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.