பாஜக வெற்றி என்ற கருத்துக்கணிப்பால் எகிறிய இந்திய பங்குச்சந்தை

பாஜக வெற்றி என்ற கருத்துக்கணிப்பால் எகிறிய இந்திய பங்குச்சந்தை

பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என நேற்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியானது. இதனையடுத்து இன்று காலை வர்த்தகத்தில் இந்திய பங்குச்சந்தைகளில் பெரிய ஏற்றம் காணப்பட்டது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் ஆயிரத்து 318 புள்ளிகள் அதிகரித்து 39 ஆயிரத்து 249 புள்ளிகளில் வர்த்தகமானது. அதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி, 408 புள்ளிகள் அதிகரித்து 11 ஆயிரத்து 815 புள்ளிகளில் வர்த்தகமானது.

அதேபோல் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61 காசுகள் உயர்ந்து 69 ரூபாய் 61 காசுகளாக உள்ளது.

Leave a Reply