பாஜக தோல்விக்கு முழு பொறுப்பேற்கிறேன்: சத்தீஸ்கர் முதல்வர் ரமன் சிங்
நடைபெற்று முடிந்த சத்தீஷ்கர் சட்டமன்ற தேர்தலில் பாஜக தோல்வி அடைந்து ஆட்சியை பறிகொடுத்துள்ளது. இந்த மாநிலத்தில் காங்கிரஸ் முழு மெஜாரிட்டி பெற்று புதிய ஆட்சியை அமைக்கவுள்ளது
இந்த நிலையில் சற்றுமுன்னர் சத்தீஸ்கர் முதல்வர் ரமன் சிங் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் சமர்ப்பித்தார். மாற்று அரசு அமைக்கும் வரை முதல்வராக இருக்குமாறூ ஆளுனர் அவரை கேட்டுக்கொண்டார்
இந்த நிலையில் ராஜினாமாவிற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ரமன் சிங், ‘வலுவான எதிர்க்கட்சியாக செயல்பட்டு மாநில வளர்ச்சிக்காக பாடுபடுவோம் என்று, சத்தீஸ்கர் பேரவை தேர்தலில் பாஜக தோல்வி அடைந்ததற்கு முழுபொறுப்பேற்கிறேன் என்றும் தெரிவித்தார்.