பாஜக தொண்டர் வீட்டில் இரவு உணவு சாப்பிட்ட அமித்ஷா!

டெல்லியில் வரும் பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதை அடுத்து கடந்த சில நாட்களாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியில் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்

இந்த முறை அரவிந்த் கெஜ்ரிவாலை வீழ்த்தி டெல்லியில் ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்று அவர் தீவிரமாக இருப்பதாக கூறப்படுகிறது. தேர்தல் பிரச்சாரத்தின்போது அமித்ஷா, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் எழுப்பப்படும் கேள்விகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது

இந்த நிலையில் டெல்லியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் அமித் ஷா மற்றும் டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி ஆகிய இருவரும் நேற்று இரவு பாஜக தொண்டர் மனோஜ் குமார் என்பவரின் இல்லத்தில் இரவு உணவு சாப்பிட்டார்கள். இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply